புதன், 10 அக்டோபர், 2018

உதகை மலை ரயிலுக்கான கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது! October 10, 2018

Image

மேட்டுப்பாளையம் – உதகை இடையே தினசரி மலைரயில் இயக்கப்பட்டு வருகிறது. உலக பாரம்பரிய சின்னமாக யுனஸ்கோ அங்கீகாரம் பெற்ற  பழமை வாய்ந்த மலை ரயிலில் பயணிக்கவும், இப்பயணத்தின் போது நீலகிரி மலையின் இயற்கை எழிலை கண்டு ரசிக்கவும், இந்த ரயிலில் பயணிக்க உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

இந்த மலை ரயில் சேவையால் ரயில்வே நிர்வாகத்திற்கு இழப்பு ஏற்பட்டு வருவதாகவும், இதனை ஈடுகட்டும் வகையில் மலைரயில் கட்டணம் உயர்த்தப்படுவதாகவும் கடந்த ஜூலை மாதம் ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு முதல் வகுப்பு கட்டணம் 195 ரூபாயில் இருந்து 470 ரூபாயாகவும், மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு 174 ரூபாயில் இருந்து 365 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 

இதேபோல் இரண்டாம் வகுப்பு கட்டணங்களும் பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. கட்டண உயர்வுக்கு சுற்றுலா பயணிகள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.