18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிபதி சத்திய நாராயணன் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள்
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் ஏற்கனவே இரண்டு நீதிபதிகள் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் தான் தீர்ப்பு வழங்கவில்லை என்றும், தனது தனிப்பட்ட ஆய்வின் அடிப்படையிலேயே தீர்ப்பு வழங்கியுள்ளதாகவும் கூறினார்.
18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் பிறப்பித்த உத்தரவு இயற்கை நீதியின் அடிப்படையிலேயே அமைந்துள்ளதாக நீதிபதி சத்திய நாராயணன் கூறினார்.
ஆளும் கட்சி எம்.எல்.எக்களால் ஆட்சிக் கவிழ்க்கப்பட வாய்ப்பு உள்ளதாக சபாநாயகர் சந்தேகிக்கும்போது சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு உரிமை உள்ளது என்று கூறியுள்ள நீதிபதி,
முதலமைச்சருக்கு எதிராக ஆளுநரிடம் புகார் அளித்த 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு சரியே என தனது தீர்ப்பில் கூறினார்
தகுதி நீக்கத்திற்கு எதிராக 18 எம்.எல்.ஏக்கள் தாக்கல் செய்த மனுக்கள் விசாரணைக்கு ஏற்றதல்ல என்பதன் அடிப்படையில் 18 பேரின் மனுக்களை தள்ளுபடி செய்கிறேன் என நீதிபதி சத்திய நாராயணா தெரிவித்தார்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களின் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாகவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாகவும் தேவைப்பட்டால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்திக்கொள்ளலாம் என்றும் நீதிபதி சத்திய நாராயணன் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.