கேரளாவில் கடைகள், வணிக நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் இனி உட்கார உரிமை அளித்து கேரள மாநில அரசு அவசர சட்டத்தை இயற்றியுள்ளது.
பணி நேரத்தில் உட்காரவும், ஓய்வெடுக்கவும் வாய்ப்பு வழங்க வேண்டும் என பல்வேறு மையங்களில் பெண் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். இதற்கு செவிசாய்த்து இந்த அவசர சட்டத்தை கேரள அரசு நிறைவேற்றியுள்ளது.
இந்த புதிய சட்டம் மூலம் பெண்களுக்கு இரவு நேரங்களில் வேலை அளிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், இரவு பயண வசதியையும் நிறுவனமே செய்துதர வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல் ஒவ்வொரு ஊழியருக்கும் வாரத்தில் ஒரு நாளாவது முழுமையாக விடுப்பு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.