திங்கள், 29 அக்டோபர், 2018

பிட்ஸ்பர்க் நகரில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பன்னாட்டு தலைவர்கள் கண்டனம்! October 28, 2018

Image

மெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 11 பேர் கொல்லப்பட்டனர். 

பிட்ஸ்பர்க் நகரில் உள்ள யூத வழிப்பாட்டு தலத்தில் புகுந்த மர்மநபர் ஒருவர், அங்கு கூடியிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார். இதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் மேலும் 7 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூட்டை நடத்திய ராபர்ட் பவர் என்ற அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். 

இதுதொடர்பாக எஃபிஐ நடத்திய முதற்கட்ட விசாரணையில், இந்த தாக்குதல் சம்பவத்திற்கு முன்பாக ராபர்ட் பவர், யூதர்களுக்கு எதிராக கருத்துகளை பதிவிட்டதுடன், அனைத்து யூதர்களையும் கொல்லப்போவதாகவும் குறிப்பிட்டிருந்தது தெரியவந்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உட்பட பல்வேறு நாட்டு தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.