மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தை இன்று கடும் சரிவுடன் தொடங்கியுள்ளதால், முதலீட்டாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் இதுவரை இல்லாத அளவில் 980 புள்ளிகள் சரிந்து 33,774 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டியும் 262 புள்ளிகள் வரை வீழ்ச்சியை சந்தித்து, 10,196 புள்ளிகளில் வணிகம் நடைபெற்று வருகிறது. இதனிடையே அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் 64 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 74 ரூபாய் 47 காசுகளாக சரிந்துள்ளதால் பொருளாதார வல்லுநர்கள் மற்றும் விமர்சகர்கள் கவலையடைந்துள்ளனர்.
source:
http://ns7.tv/ta/tamil-news/business/11/10/2018/mumbai-and-national-stock-exchange-got-shocking-start