வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே, விவசாயியின் வீட்டிற்கே சென்று கிராம நிர்வாக அலுவலர் ஒருவர், லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாணியம்பாடி அடுத்த இராமநாயக்கன் பேட்டை ஊராட்சியில் உள்ள குழிகொல்லி பகுதியைச் சேர்ந்தவர் திருப்பதி. 100 நாள் வேலை திட்டத்தில் விவசாய நிலத்தில் வரப்பு போடவும், போர்வெல்லுக்கு மின் இணைப்பு பெற அடங்கல் மற்றும் வரைபடம் தருவதற்கும், இராமநாயக்கன் பேட்டை கிராம நிர்வாக அலுவலர் கேசவன் என்பவர், 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.
இதற்காக திருப்பதியின் வீட்டிற்கே சென்று பேரம் பேசிய விஏஓ கேசவன், இறுதியில் 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக தெரிகிறது. கேசவன் லஞ்சம் வாங்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.