திங்கள், 22 அக்டோபர், 2018

முதல் முறையாக பெட்ரோல் விலையை தாண்டியது டீசல் விலை! October 22, 2018

Image

ஒடிசாவில் பெட்ரோலை விட டீசல் விலை உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  

ஜுன் 16 - 2017 ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலையை தினசரி அடிப்படையில் நிர்ணயித்து கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதனால் பெட்ரோல் டீசலின் விலை தினமும் மாறிக்கொண்டே இருக்கின்றது. இம்முறை அமலுக்கு வந்து ஓராண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவு அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் பெட்ரோல், டீசலின் விலையை குறைக்க வலியுறுத்தி நாடெங்கும் போராட்டங்கள் நடைபெற்றது. இதனால் மத்திய அரசு பெட்ரோல், டீசலின் விலையை குறைக்க கலால் வரியை சற்று மாற்றி அமைத்தது. மேலும் ஒரு சில மாநில அரசுகளின் வரிக் குறைப்பால், இந்தியாவின் ஒரு சில மாநிலங்களில் பெட்ரோல், டீசலின் விலை சுமார் 5 ரூபாய் அளவிற்கு குறைந்தது.

இந்நிலையில் ஒடிசாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் 80 ரூபாய் 57 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், டீசல் விலை 12 காசுகள் அதிகமாக 80 ரூபாய் 69 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெறும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.