சனி, 20 அக்டோபர், 2018

​நாட்டை உலுக்கிய மிகப்பெரிய ரயில் விபத்துகள்! October 20, 2018

நாட்டை உலுக்கிய மிகப்பெரிய ரயில் விபத்துகள் குறித்த முழு விவரம்.

► 1981,ஜூன் – பீஹார் – பயணிகள் ரயில் தடம் புரண்டு பாக்மதி நதியில் விழுந்தது- உயிரிழப்பு – 500 லிருந்து 800 வரை.

► 1985, ஆகஸ்ட் -  உ.பி.- டெல்லி சென்று கொண்டிருந்த புருஷோத்தமன் எக்ஸ்பிரஸ் நின்று  கொண்டிருந்த ரயிலில் மோதி விபத்து - உயிரிழப்பு – 350 

► 1999, ஆகஸ்ட் – அசாம்- அவாத் அசாம் எக்ஸ்பிரஸ் –பிரம்மபுத்திரா மெயில் - மோதி விபத்து – உயிரிழப்பு – 268

► 1998 நவம்பர் -  பஞ்சாப் –ஜம்மூ தாவி  எக்ஸ்பிரஸ் – தடம் புரண்டு நின்று கொண்டிருந்த கோல்டன் டெம்பிள் மெயிலுடன் மோதி விபத்து – உயிரிழப்பு -212

► 2010 மே  -  மேற்கு வங்கம்-  ஹவுரா சூப்பர் டீலக்ஸ் எக்ஸ்பிரஸ்  - வெடி விபத்தால் தடம்   புரண்டது- உயிரிழப்பு -170

► 1964 டிசம்பர் – தமிழ்நாடு – பாம்பன் தனுஷ்கோடி எக்ஸ்பிரஸ்- புயலால் விபத்து – உயிரிழப்பு - 150
          
► 1954 செப்டம்பர் – ஆந்திரா- ஐதராபாத் அருகே பயணிகள் ரயில்,  யசந்தி நதி பாலத்தின் மேல்  சென்றுக்கொண்டிருந்த் போது பாலம் உடைந்ததால் விபத்து- உயிரிழப்பு- 139
                               
► 1956 செப்டம்பர்-  ஆந்திரா – பாலம் உடைந்ததால் பயணிகள் ரயில் விபத்து  - உயிரிழப்பு – 125

► 1937 பீகார் –கல்கத்தாவிலிருந்து பாட்னாவை நோக்கி   சென்று கொண்டிருந்த ரயில்  கட்டுபாட்டிழந்து  விபத்து – உயிரிழப்பு - 119

► 2018 அக்டோபர் 19 - அமிர்தசரஸ் அருகே தசரா கொண்டாட்டத்தின் போது தண்டவாளத்தில் நின்றவர்கள் மீது ரயில் மோதி விபத்து