ஞாயிறு, 21 அக்டோபர், 2018

2 கோடி பேருக்கு பக்கோடா கடை திறந்து பாஜக அரசு வேலை வாய்ப்பு அளிக்க உள்ளது - ப. சிதம்பரம் October 20, 2018

Image

நாட்டில் வேலையில்லாமல் உள்ள 2 கோடி பேருக்கு பக்கோடா கடை திறந்து பாஜக அரசு வேலை வாய்ப்பளிக்க உள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கிண்டல் செய்துள்ளார். 

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் அக்கட்சியின் சார்பில் தேர்தல் அறிக்கை கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய சிதம்பரம், நாட்டு மக்கள் அனைவரது வங்கிக் கணக்கிலும் பிரதமர் மோடி 15 லட்சம் போட்டுவிட்டதாகவும், ஞாயிறு வங்கி விடுமுறை என்பதால் திங்களன்று எடுத்துக் கொள்ளலாம் என்று கூறியதாக விமர்சித்தார்.

நான்கரை ஆண்டுகலாக இந்திய பொருளாதாரத்தை பாஜக அரசு சீரழித்துள்ளது என்றும் அதனால், ஏழை மக்களின் சராசரி மாத வருமானம் 6 ஆயிரமாக உள்ளது என கூறினார். ஊடக சுதந்திரத்தின் குரல்வளை நெறிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். 
source; http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/20/10/2018/bjp-government-has-opportunity-open-piagoda-shop-2-crore-people-p