தமிழகத்தில் 70 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படவுள்ளது.
12 கோடி செலவில் qr code உதவியுடன் ஸ்மார்டு கார்டுகள் பள்ளி மாணவ, மாணவியருக்கு வழங்கபடவுள்ளது.
இதற்காக ஆகும் செலவை அரசே ஏற்கும் என்றும், ஸ்மார்ட் கார்டில் மாணவர்களின் பெயர், முகவரி, புகைப்படம், இரத்த வகை உள்ளிட்ட விவரங்கள் இடம்பெறும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
இதற்கான அரசாணையை பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ளார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள
அனைத்து மாணவர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படவுள்ளது.