பிரதமர் மோடி ஓடலாம், ஒளியலாம், ஆனால் அவரால் சிபிஐ விவகாரத்தில் உண்மையை மறைக்க முடியாது என, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
சிபிஐ அமைப்பின் புதிய தற்காலிக இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமனம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் சிபிஐ அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். டெல்லி லோதி காலனியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ராகுல் காந்தியும் கலந்து கொண்டார். உடனடியாக, ராகுல் காந்தி உள்ளிட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு, காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர்.
காவல் நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டதும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராகுல், பிரதமர் மோடி சிபிஐ இயக்குனர் போல் செயல்படுவதாகவும், இது வெறும் பயமுறுத்தும் செயல் எனவும் விமர்சித்தார். மேலும், "ரஃபேல் ஒப்பந்தத்தை பெற்றுக் கொடுத்ததன் மூலமாக அனில் அம்பானிக்கு 30 ஆயிரம் கோடியை பிரதமர் மோடி அள்ளிக் கொடுத்துள்ளதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.