உள்நாட்டில் தயாரான இந்தியாவின் அதிவேக 'ரயில்-18' ஜனவரி மாதம் முதல் தனது சேவையை தொடங்கும் என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ரயில்-18-ன் பெட்டிகள் சென்னையில் உள்ள ஐசிஎப்-ல் தயாரிக்கப்பட்டடன. இந்த அதிநவீன ரயிலில் எக்சிக்யூடிவ், நான்எக்சிக்யூடிவ் என தனித்தனியாக 16 பெட்டிகள் உள்ளன. இதேபோன்று மேலும் 5 ரயில்கள் சென்னை ஐசிஎப்பில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் சாதாரணமாக இயங்கும் ரயில்கள் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரயில் 160 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தானியங்கி கதவுகள், வைஃபை வசதிகள், குளிரூட்டப்பட்ட பெட்டிகள் என அனைத்து அம்சங்களையும் கொண்ட இந்த ரயில், ஜனவரி மாதம் முதல் தனது சேவையை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.