சாலையில் பொறுப்பில்லாமல் வாகனங்கள் ஓட்டுவதால், நாட்டில் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
திருப்பூரில் தனியார் பேருந்து மோதிய விபத்தில் காலை இழந்த சிறுமிக்கு, 19 லட்சம் இழப்பீடு வழங்க மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. 2012ம் ஆண்டு நடைபெற்ற இந்த விபத்து தொடர்பான நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, காப்பீட்டு நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், பொங்கியப்பன் அடங்கிய அமர்வு, வாகன ஓட்டிகள், பொறுப்பில்லாமல் வாகனங்களை ஓட்டுவதால், நாட்டில் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளதாக வேதனை தெரிவித்தனர்.
காலை இழந்த சிறுமிக்கு வழங்க உத்தரவிடப்பட்ட தொகையை 19 லட்சத்தில் இருந்து 52 லட்சமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள், வட்டியுடன் சேர்த்து நான்கு வாரங்களுக்குள் வங்கி கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.