
பசும்பொன் முத்துராமலிங்க தேவரை பற்றி அவதூறாக பேசிய நபரை கைது செய்யக்கோரி கமுதியில் கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவு கல்லூரி இயங்கி வருகிறது. இந்நிலையில் முத்துராமலிங்க தேவரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசிய நபரை கைதுசெய்யக்கோரி கமுதி-முதுகுளத்தூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் கலைந்து சென்றனர்.