புதன், 24 அக்டோபர், 2018

​பசுமை பட்டாசு என்றால் என்ன தெரியுமா? October 24, 2018

Image

பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்க முடியாது என தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், அத்துடன் GREEN CRACKERS எனப்படும் பசுமை பட்டாசுக்கள் மட்டுமே வெடிக்கலாம் என உத்தரவிட்டுள்ளது. பசுமை பட்டாசு என்றால் என்ன என்பதை பற்றிய முழு விவரம்.

2017 - டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்து பசுமை பட்டாசுகளை தயாரிக்க வேண்டும் -  மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன்.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு தயாரிக்கப்படும் பட்டாசுகளுக்கு பசுமை பட்டாசுகள் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் மாசு அளவு குறையும்.

சராசரி பட்டாசுகள் ஏற்படுத்தும் ஒலியின் டெசிபல் அளவை விட குறைவான ஒலியே  பசுமை பட்டாசுகள் உண்டாக்கும்.

சராசரி பட்டாசுகளின் விலையை விட பசுமை பட்டாசுகளின் விலை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2018 - பல்வேறு கட்ட ஆராய்ச்சிக்கு பிறகு  பசுமைப் பட்டாசை தயாரித்திருப்பதாக பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த வேதியியல் ஆய்வாளர் சாம்ராட் கோஷ் தெரிவித்திருக்கிறார்.