மதுரை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பரவி வரும் வைரஸ் காய்ச்சலுக்கு 200-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரையில் காய்ச்சலுக்கு 115 பேர் பாதிக்கப்பட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் 11 பேரும், பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அரியலூர் அருகே அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால், நோயாளிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். செந்துறையில் உள்ள அரசு முழு சுகாதார மருத்துவமனையில் போதிய மருத்துவர் இல்லை எனக் கூறப்படுகிறது.
மூன்று மருத்துவர்கள் இருக்க வேண்டிய இடத்தில், ஒரு மருத்துவரே பணியாற்றுவதாகவும், அவரும் விடுப்பில் சென்றுவிட்டதால் சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் அவதிக்குள்ளாவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.