குஜராத்தில் வசித்து வந்த பீகார், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேச மாநில மக்களுக்கு எதிராக உள்ளூர் மக்கள் வன்முறையில் ஈடுபட்டதை அடுத்து, ஆயிரக்கணக்கானோர் வெளியேறி வருகின்றனர்.
கடந்த மாதம் குஜராத்தில் 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் பீகார் மாநிலத்தவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, ஏற்பட்ட வன்முறை காரணாக பாதிக்கப்பட்ட வெளிமாநில தொழிலாளர்கள், குஜராத்தில் இருந்து வெளியேறி வருகின்றனர். கடந்த சில நாட்களாக அவர்கள் வெளியேறி வருவதால், குஜராத்தில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள், பணியாளர்கள் இன்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
உணவகங்களும் பெரும்பாலும் மூடியே காணப்படுகின்றன. இதே நிலை தொடர்ந்தால், தொழில்துறை மற்றும் வர்த்தகத்திற்காக பெயர் பெற்ற குஜராத் தனது பெயரை இழக்கும் என தொழில்துறையினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.