திங்கள், 29 அக்டோபர், 2018

​"சென்னை மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யக்கூடும்" - வானிலை ஆய்வு மையம் October 29, 2018

Image

அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யக்கூடும் என்று என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீப காலத்தில் ரெட் அலர்ட் அறிவிப்புக்கு முன்பிருந்து தமிழகத்தில் மிதமாக மட்டுமே ஆங்காங்கு மழை பெய்துவருகிறது. ரெட் அலர்ட் அறிவிப்புக்கு பின் சொல்லிக் கொள்ளும்படியாக மழை ஏதுமில்லை. இந்நிலையில் தமிழகத்தில்  வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் இதுவரை ஏற்படவில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

மேலும், அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யக்கூடும் என்றும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தக்கலை மற்றும் நாகர்கோவிலில் அதிகபட்சமாக 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Posts: