
மேட்டூர் அனல் மின் நிலையத்தில், நிலக்கரி பற்றாக்குறையால் நிறுத்தப்பட்ட 600 மெகாவாட் மின் உற்பத்தி ஒரு வாரத்திற்கு பின்னர் மீண்டும் தொடங்கியது.
மேட்டூரில் 840 மெகாவாட் மற்றும் 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் அனல் மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. நிலக்கரி பற்றாக்குறையால், கடந்த 4ம் தேதி 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் அனல் நிலையத்தில் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
நிலக்கரி பற்றாக்குறை சரியான நிலையில், ஒரு வாரத்திற்கு பிறகு மின் உற்பத்தி பணிகள் தொடங்கியுள்ளன