சனி, 20 அக்டோபர், 2018

இந்தியாவில் ஒரு தனிநபரின் சராசரி செல்வ மதிப்பு என்ன தெரியுமா? October 20, 2018

இந்தியாவில், சராசரியாக ஒரு தனிநபரின் செல்வ மதிப்பை கணக்கிட்டு, Credit Suisse என்ற அமைப்பு  அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் சராசரியாக ஒரு தனிநபரின் சொத்துமதிப்பு ரூ.5.15 லட்சமாக கணக்கிடப்பட்டுள்ளது 

இந்தியாவில் ரூ. 7.6 கோடிக்கு மேல் (1 மில்லியன் டாலர்) சொத்து உடையவர்கள் எண்ணிக்கை 3.43 லட்சமாக இருக்கிறது.

கடந்த ஓராண்டில் ரூ. 7.6 கோடிக்கு மேல்  ( 1 மில்லியன் டாலர் ) சொத்து உடையவர்களள் பட்டியலில்  7,300  பேர் இணைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இந்தியாவில் ரூ.735 கோடிக்கு மேல் (100 மில்லியன் டாலர் )  சொத்து உடையவர்களள் 1500 பேர். இதன்மூலம், அதிக செல்வந்தர்கள் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 6வது இடம் கிடைத்துள்ளது.

தனி நபர் சொத்துமதிப்பில் உலகின் பணக்கார நாடாக ஸ்விட்சர்லாந்து அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்விட்சர்லாந்தை அடுத்து பணக்கார நாடுகள் பட்டியலில் ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் உள்ளன.