சிவகங்கை மாவட்டம் கீழடியில் 4ம் கட்ட அகழாய்வுக்காக தோண்டப்பட்ட குழிகளை மூடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த கீழடியில், தமிழக அரசின் தொல்லியல்துறை சார்பில் அகழாய்வு நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 4 கட்டங்களாக நடைபெற்ற ஆய்வுக்காக 34 குழிகள் அமைக்கப்பட்டன. இதில் தங்க ஆபரணங்கள், பிராமி எழுத்துக்கள், கட்டட பகுதிகள் உள்ளிட்ட 5 ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டறியப்பட்டன.
4ம் கட்ட அகழாய்வு பணிகள் முடிவுற்ற நிலையில், அதற்காக தோண்டப்பட்ட குழிகளை மூடும் பணிகள் தொடங்கியுள்ளன. விரைவில் 5ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.