புதன், 24 அக்டோபர், 2018

100 நாள் வேலை வாய்ப்பு திட்ட ஊதியத்தை உயர்த்த கோரி விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்! October 24, 2018

Image

100 நாள் வேலை வாய்ப்பு திட்ட ஊதியத்தை உயர்த்தி வழங்க கோரியும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரியும் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கருப்பு துணி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

விவசாய தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாத மத்திய மாநில அரசுகளை கண்டித்து தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கிருஷ்ணகிரியில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெங்களூர் சாலை வழியாக ஏராளமான விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி பேரணியாக சென்று, அண்ணா சிலை அருகே  முழக்கங்களை எழுப்பினர்.

Related Posts: