வெள்ளி, 12 அக்டோபர், 2018

பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவசர அவசரமாக பிரான்ஸ் சென்றது ஏன்? - ராகுல்காந்தி October 11, 2018

Image

பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், அவசர அவசரமாக பிரான்ஸ் சென்றது ஏன்?, என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி ஏற்கனவே ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி இன்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, பாஜக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில், ஊழல் நடந்திருப்பது, தெளிவாக தெரிகிறது என தெரிவித்தார்.

மேலும், இந்திய பிரதமர் ஊழல் பேர்வழி என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது என கூறிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி ஒரு ஊழல்வாதி என இளைஞர்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன், என்றும் குறிப்பிட்டார். அத்துடன், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் நாட்டிற்கு தற்போது அவசரமாக சென்றது ஏன்?, என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.

Related Posts: