வாட்ஸ் அப்பின் நிர்வாக இயக்குநர் யார் என்றே தெரியாமல் 50 சதவீத அமெரிக்கர்கள் அதனை பயன்படுத்தி வருகின்றனர் என சமீபத்தில் வெளியாகியுள்ள ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள டக் டக் கோ (DuckDuckGo) என்ற தேடுபொறி நிறுவனம் 1297 அமெரிக்கர்களிடம் ஆய்வு மேற்கொண்டது. அதில், 50.42 சதவீத அமெரிக்கர்களுக்கு வாட்ஸ் அப்பை ஃபேஸ்புக் நிர்வகித்து வருகிறது என்பது தெரியவில்லை. அதே போல, அவர்கள் அதிகம் பயன்படுத்தும் வேஸ் எனப்படும் Navigation செயலியை கூகுள் நிர்வகிக்கிறது என்பதே தெரியாமல் பயன்படுத்திவந்துள்ளனர் என்று ஆய்வு முடிவில் தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோல இதற்கு முன்பு நடத்திய ஆய்வு ஒன்றில் 56.9 சதவீத அமெரிக்கர்களுக்கு இஸ்டாகிராமை நிர்வகிப்பது ஃபேஸ்புக் என்பது தெரியவில்லை எனவும் 44.6 சதவீதம் அமெரிக்கர்களுக்கு யூடியூபை நிர்வகிப்பது கூகுள் என்பது தெரியவில்லை எனவும் அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மிகவும் வளர்ச்சியடைந்த நாடாக கருதப்படும் அமெரிக்காவில் இருப்பவர்களுக்கு இதுபோன்ற அடிப்படையான தகவல்கள் டெஹ்ரியாதது பலரிடையே ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.