வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க தமிழகம் முழுவதும் 8 லட்சத்து 62 ஆயிரத்து 373 பேர் விண்ணப்பித்துள்ளதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுஹு தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த செப்டம்பர் 1 ம் தேதி வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அக்டோபர் 31 ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் மேற்க்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டது. மேலும் தேர்தல் ஆணையம் சார்பில் செப்டம்பர் 9 மற்றும் 23, அக்டோபர் 7 மற்றும் 14 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனு. இது தவிர ஆன்லைன் மூலமும் திருத்தம் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் , தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க மொத்தம் 8 லட்சத்து 62 ஆயிரத்து 373 பேர் விண்ணப்பித்துள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுஹு கூறியுள்ளார். வரும் அக்டோபர் 31 ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்க்கொள்ள கால அவகாசம் உள்ளதாகவும், வரும் அக்டோபர் 14ம் தேதி அன்று இறுதி சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை பொது மக்கள் பயன்படுத்துக் கொள்ளுமாறும் தலைமை தேர்தல் அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.