தமிழக முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 58
சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் அமைச்சர் பரிதி இளம் வழுதி மாரடைப்பால் காலமானார். 1984ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை 28 ஆண்டுகள் திமுகவில் இருந்த அவர், 6முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1996 முதல் 2001ம் ஆண்டு வரை பேரவைத் துணைத் தலைவராக இருந்த அவர், 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக பதவி வகித்தார். 1991 முதல் 1996ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் இவர் செயல்பட்ட விதத்தைக் கண்டு அப்போதைய திமுக தலைவர் கருணாநிதியால், இந்திரஜித், வீர அபிமன்யு ஆகியோருடன் ஒப்பிட்டு புகழப்பட்டார்.
திமுகவில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக திமுகவில் இருந்து விலகிய பரிதி இளம்வழுதி, கடந்த 2013ம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.