கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்ட யூ டியூப் இணையதள சேவை திடீரென முடங்கியுள்ளது. சர்வர் கோளாறு காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக யூ டியூப் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
பொழுதுபோக்கு வீடியோ, கல்வி சம்பந்தப்பட்ட வீடியோ என பல லட்சம் வீடியோக்களை கொண்டுள்ள யூ டியூப், இணையதளவாசிகளிடையே அதி முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. பொழுதுபோக்குக்காக பயன்படுத்தப்பட்டது மாறி, தற்பொழுது பணம் கொட்டும் தளமாகவும் யூ டியூப் இருக்கிறது. இதனால் பல இளைஞர்கள் யூ டியூபை வைத்து வருமானம் பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், திடீரென யூ டியூப் இணையதள சேவை முடங்கி இருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வர் கோளாறு காரணமாக இவ்வாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ள யூ டியூப் , இதனை விரைவில் சரி செய்துவிடுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

யூ டியூப் முடக்கத்தை தொடர்ந்து சமூகதளவாசிகள் தங்கள் கருத்துக்களை தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். இதனால், #YouTubeDOWN என்ற ஹேஷ்டாக் உலக ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.