சனி, 13 அக்டோபர், 2018

துபாயில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள போலீஸ் ரோபோ! October 13, 2018

Image

காவல்துறையை அதிநவீனமாக்கும் நோக்கில் போலீஸ் ரோபோ மற்றும் சில நவீன தொழில்நுட்பங்களை துபாயில் அறிமுகப்படுத்திவருகிறது துபாய் அரசு.

நகரத்தை கண்காணிப்பதற்காகவும் சுற்றுலாப் பயணிகளுக்கு உதவுவதற்காகவும் இந்த ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது அபராத தொகையை செலுத்துவதற்காகவும்., தகவல்களை தெரிந்துகொள்வதற்காகவும் இந்த ரோபோவை பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரோபோவில் பதிவாகும் தகவல்கள் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சென்றடைந்துவிடும். இந்த ரோபோவின் மார்பு பகுதியில் உள்ள Touch Screen-ல் தங்களுக்கு தேவையான தகவல்களை சுற்றுலாப்பயணிகள் பெற்றிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

தற்பொழுது அராபிக் மற்றும் ஆங்கிலம் மட்டுமே பேசக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோ வெகு விரைவில் ரஷ்யன், சைனீஸ், பிரஞ்சு, ஸ்பானிஷ் போன்ற மொழிகளில் பேசுமாறு மாற்றி அமைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

காவலர்களுக்கு மாற்றாக அல்லாமல், காவலர்களுக்கு உதவியாக மட்டுமே இதுபோன்ற தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக துபாய் காவல்துறை உயர் அதிகாரி தெரிவித்தார்.