வெள்ளி, 21 டிசம்பர், 2018

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு விதித்துள்ள தடை வரும் 1ம் தேதி அமலாகும் நிலையில், எந்தெந்த பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது பற்றியும், அரசாணையை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் பற்றிய முழு விவரத்தை வெளியிட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என தமிழக அரசு இந்த ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி அறிவித்தது. அதன் படி வரும் 1ம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை அமலுக்கு வருகிறது. ஒருமுறை பயன்படுத்தி தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், தண்ணீர் பாக்கெட்டுகள், பாலித்தீன் பைகள், கப், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் டம்ளர்கள் ஆகிய மறுசுழற்சி செய்ய முடியாத பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. என்னும், பால், தயிர், எண்ணெய், மருத்துவ உபகரணங்களை பேக் செய்ய பயன்படும் பிளாஸ்டிக், மக்கும் பொருட்களுக்கு இந்த தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பிறப்பித்த அரசாணை தெளிவாக இல்லை என பிளாஸ்டிக் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் தமிழக அரசு விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தடைக்கான விதியை மீறினால் மக்களுக்கு என்ன தண்டனை என்று அரசு இன்னும் அறிவிக்காதது குறிப்பிடத்தக்கது. தண்டனையை பற்றி தெளிவு இல்லாததால் தடையை அமல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், உள்ளாட்சி அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இதனிடையே, தடையை மீறுவோருக்கான அபராதம் குறித்த விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் 80 சதவீத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை இல்லை என்று சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Image

source: ns7.tv

தென் தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று மாலை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென் மேற்கு வங்க கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு நிலையின் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி கோவை, உள்ளிட்ட தமிழகத்தின் மலை சார்ந்த பகுதிகளில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான வானிலை இருப்பதால் மழை பெய்யுமா என்ற எதிர்பார்ப்பில் காத்திருந்த மக்களுக்கு இந்த செய்தி சற்று நிம்மதியை தருவதாக இருக்கிறது.