வெள்ளி, 14 டிசம்பர், 2018

கழிவறை கட்டித்தராத தந்தை மீது புகாரளித்த ஆம்பூர் சிறுமி: நேரில் சென்று பாராட்டிய மாவட்ட ஆட்சியர்! December 14, 2018

Image

ஆம்பூரில் கழிவறை கட்டிதருவதாக கூறி ஏமாற்றி வரும் தந்தை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்நிலையத்தில் புகார் அளித்த 2-வகுப்பு மாணவியின் வீட்டிற்கு மாவட்ட ஆட்சியர் சென்று, மாணவியை பாராட்டினார். 

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் கடந்த 10 ந்தேதி அன்று 2-ஆம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமி அனிபா ஜாரா காவல்நிலையம் சென்று புகார் ஒன்றை அளித்தார். இதில் தன்னுடைய வீட்டில் கழிவறை இல்லை என்றும் கழிவறை கட்டித்தருவதாகக் கூறி  தனது தந்தை ஏமாற்றி வருவதாக புகார் அளித்தார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனகேட்டுக்கொண்டார். 

இதையடுத்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கையால், அந்த சிறுமியின் வீட்டில் கழிவறை கட்டும் பணி நடைபெற்றது. மேலும் அந்த சிறுமி ஆம்பூர் நகர தூய்மை இந்தியா திட்டத்தின் தூதவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் ராமன் அந்த சிறுமியின் வீட்டிற்கு நேரில் சென்று அவருக்கு பாராட்டு தெரிவித்தார்.