திங்கள், 17 டிசம்பர், 2018

மேகதாது விவகாரம் - மக்கள் நலனை தமிழக அரசு கருத்தில் கொள்ளவில்லை : திருச்சி சிவா December 17, 2018

Image

source: ns7.tv
மேகதாது விவகாரத்தில் மக்களின் நலனை தமிழக அரசு கருத்தில் கொள்ளவில்லை என திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தொழிலதிபர்களுக்கு இருக்கும் அதிகாரம், சாதாரண மக்களுக்கு இல்லை என்பதாலேயே 13 பேரை சுட்டுக்கொன்ற பின்னரும் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படுகிறது என விமர்சித்தார்.

மேலும், கஜா புஜயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்தை பிரதமர் பார்வையிடாமல் இருப்பது வருத்தம் அளிப்பதாகவும் திருச்சி சிவா தெரிவித்தார். மேகதாது விவகாரத்தால் தமிழ்நாடு பாலைவனமாக மாறும் என்பதை இந்த அரசு புரிந்து கொண்டு மக்களுக்கு ஏற்ப நீதிமன்றத்தில் சரியான வாதத்தை வைக்க வேண்டும் ஆனால் இந்த அரசு ஒரு போதும் மக்கள் நலனை கருத்தில் கொள்வதில்லை.

மக்களை குறி பார்த்து சுட்டது இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் நடைபெறும். 13 பேர் உயிரை பறித்தும் மீண்டும் இந்த ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுகிறது என்றால் ஆலை அதிபருக்கு இருக்கும் அதிகாரம் ஏழை எளிய மக்களுக்கு இல்லை. நாடாளுமன்றத்தில் புயல் பாதிப்புக்கு சரியான நிவாரணம் வழங்கவும் ரஃபேல் விவகாரத்தில் கூட்டு விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்றும் மீனவர்களும் விவசாயிகளும் ஓடிக் மொத்தமாக வாழ்வாதாரத்தை இழத்து இருக்கிறார்கள் அவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்கவும் கோரிக்கை வைக்கப்படும் என்றார்.

ஒன்று இரண்டு உயிர் இழப்புகளை கூட விசாரிக்கும் பிரதமர் தமிழ்நாட்டைப் பார்வை இடாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. தமிழ்நாடு என்றால் ஓர கண்ணால் பார்ப்பதும் ஒதுக்கி வைத்து பார்ப்பதும் வாடிக்கையாகி விட்டது என்றும் அவர் விமர்சித்தார்