சனி, 22 டிசம்பர், 2018

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், 17 வயது சிறுமி கழுத்தறுக்கப்பட்டு கொலை! December 21, 2018

Image

source: ns7.tv
திருநெல்வேலி அருகே சுண்ணாம்பு ஆலையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், 17 வயது சிறுமி கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
தென்கலம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மதார்மைதீன், பேட்டையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது 17 வயது மகள், பேஸ்புக் மூலம் அறிமுகமான வாணியங்குளத்தைச் சேர்ந்த ஜேசிபி ஆபரேட்டர் சுந்தரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
பெற்றோர் கண்டித்த நிலையில், திடீரென வீடு திரும்பாத அந்த சிறுமி சின்னமூலைக்கரையில் உள்ள சுண்ணாம்பு ஆலையில், கை கால்கள் கட்டப்பட்டு, கழுத்தறுக்கப்பட்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடலை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மூலக்கரைப்பட்டி போலீஸார், சம்பவ இடத்திலிருந்து கத்தி ஒன்றை கைப்பற்றினர்.  
சிறுமியை காதலித்த சுந்தர், தனது நண்பர்களுடன் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்திருக்கலாம் என்றும், அதற்கு உடன்படாததால், சிறுமி படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும்  போலீஸார் சந்தேகித்துள்ளனர்.
தலைமறைவான சுந்தரை கைது செய்தால் கொலைக்கான காரணம் தெரியவரும் என்றும் காவல் துறை வட்டாரங்கள் கூறுகின்றன. 17 வயது சிறுமி கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

Related Posts: