சனி, 22 டிசம்பர், 2018

ஹனுமான் ஒரு இஸ்லாமியர்” என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ?!...பாஜக கவுன்சிலர் புக்கல் நவாப் தரும் அதிர்ச்சி தகவல்! December 21, 2018

Image

source: ns7.tv

ஹனுமான் ஒரு இஸ்லாமியர் என உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பாஜக கவுன்சிலர் புக்கல் நவாப் தெரிவித்திருப்பது சமூகவலைதளங்களில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த பாஜக கவுன்சிலர் புக்கல் நவாப், சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது பல சர்ச்சை கருத்துகளை தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்துக்கடவுளான ஹனுமான் ஒரு இஸ்லாமியர் என்று தெரிவித்ததும் அதற்கு அவர் கூறியுள்ள விளக்கமும் சமூகவலைதளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.
இந்த உலகில் உள்ள அனைத்து மதங்கள் மற்றும் பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு ஹனுமானை மிகவும் பிடிக்கும் என தெரிவித்த பாஜக கவுன்சிலர் புக்கல் நவாப், தன்னை பொருத்தவரை ஹனுமான் ஒரு இஸ்லாமியர் என தெரிவித்தார். இவர் தெரிவித்த இந்த கருத்தால் அதிர்ச்சியில் மூழ்கியுள்ள பலர், இவர் தரும் விளக்கத்தால் மேலும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ரகுமான், ரம்ஜான், ஃபர்மான், ஜிஷான், குர்பான் போன்ற இஸ்லாமிய பெயர்களை போன்று ஹனுமான் என்ற பெயரும் ரைமிங்காக உள்ளதால் தன்னை பொறுத்தவரை ஹனுமான் இஸ்லாமியர் என தெரிவித்துள்ளார். சமீபத்தில், ஹனுமான் பட்டியல் சாதியை சேர்ந்தவர் என உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சர்ச்சையை கிளப்பிய நிலையில், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பாஜக கவுன்சிலர் இதுபோன்ற கருத்தை கூறியிருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Related Posts: