திங்கள், 17 டிசம்பர், 2018

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதித்த நீதிபதிகள் December 17, 2018



source: ns7.tv
Image

ஆன்லைன் மருந்து விற்பனை தொடர்பான விதிமுறைகளை வகுக்கும் வரை, ஆன்லைனில் மருந்து விற்பனைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
மருந்துகளை ஆன்லைன் மூலம் விற்கும் முறையை தடை செய்ய கோரி தமிழக முழுவதும் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, ஆன்லைன் மருந்து விற்பனையை முறைப்படுத்தக் கோரி, தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது.
இந்த வழக்கின் விசாரணை முடிந்து இன்று தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், வரும் ஜனவரி 31ம் தேதிக்குள் ஆன்லைன் மருந்து விற்பனையை முறைப்படுத்த விதிகளை வகுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதுவரை ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதித்த நீதிபதிகள், விதிகளை வகுத்து அரசிதழில் வெளியிட்ட பின்னர், அடுத்த இரண்டு மாதங்களில் மத்திய அரசுக்கு விண்ணப்பித்து உரிமம் பெறலாம் எனவும் தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
 

Related Posts:

  • ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி உடலில் அதிகமான அசதி. எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை. உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற… Read More
  • மக்கள் என்ன முட்டாளா? கேபினட் ஒப்புதல் வாங்காமலேயே 15 முக்கியத் துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி வழங்கியிருக்கிறார் மோடி. இதனை இந்திய முதலாளிகள் பாராட்டுகின்ற… Read More
  • ஆப்பிளை விட விட கொய்யா உசத்தி...... நன்றாக பழுத்த கொய்யா பழத்துடன் மிளகு, எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டு வந்தால் உடல்சோர்வு, பித்தம் நீங்கும், கொய்யாவுடன் சப்போட்ட பழத்தை சேர்த்த… Read More
  • Hadis - தொழுகை 'நமக்கும், அவர்களுக்கும் (இறை மறுப்பவர்களுக்கும்) உள்ள ஒப்பந்தம் தொழுகையாகும்; அதை விட்டவர் காஃபிராகி விட்டார்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.… Read More
  • மியன்மர் தேர்தல் கேலிக்கூத்து சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இராணுவத்தின் பிடியில் இருந்த மியன்மரில், 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆங் சான் சூச்சி கட்சி நான்கில் முன்று ப… Read More