source ns7.tv
ஜிஎஸ்டியின் 18 சதவீத வரி விதிப்பின் கீழ். 99 சதவீத பொருட்கள் கொண்டு வரப்பட உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருப்பதை, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேலி செய்துள்ளார்.
இதுகுறித்து, தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, ஜிஎஸ்டி வரி விவகாரத்தில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பிரதமர் மோடியை காங்கிரஸ் கட்சி எழுப்பி விட்டதாக கூறியுள்ளார். ஜிஎஸ்டி வரி அளவுகள் குறைக்கப்பட வேண்டும் என காங்கிரஸ் கூறியதை, கண்மூடித்தனமான சிந்தனை என மோடி கூறியதையும், தற்போது அதனை செயல்படுத்த முன்வந்துள்ளதையும் ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.
ஜிஎஸ்டி வரி வரம்பை மாற்றவே முடியாது என பிடிவாதமாக இருந்த மோடி அரசு, தற்போது அதனை எளிமைப்படுத்த முன்வந்துள்ளது வரவேற்கத்தக்கது எனவும் ராகுல்காந்தி கூறியுள்ளார்.
source ns7.tv