வெள்ளி, 21 டிசம்பர், 2018

கடந்த ஆண்டு முதலிடம் இந்த ஆண்டில் 8வது இடம் பெற்ற தமிழ்நாடு! December 20, 2018


இந்தியாவின் சிறந்த 10 காவல் நிலையங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிற்கு 8வது இடம் கிடைத்துள்ளது.

இந்தியாவில் உள்ள சிறந்த 10 காவல் நிலையங்களை ஆண்டுதோறும் தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். 2018ம் ஆண்டிற்கான சிறந்த 10 காவல் நிலையங்கள் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று வெளியிட்டார். அந்த பட்டியலில் தேனிமாவட்டம், பெரியகுளம் காவல்நிலையம் 8வது இடத்தை பிடித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் கலு மற்றும் லகேரி காவல்நிலையங்கள் முறையே முதலாவது மற்றும் ஏழாவது இடத்தை பிடித்துள்ளது.
டாப் 10 காவல் நிலையங்கள் பட்டியல்:
1- கலு - ராஜஸ்தான்
2-கேம்ப்பெல் பே - அந்தமான் நிக்கோபார் தீவுகள்
3-ஃபராக்கா - மேற்கு வங்கம்
4-நெட்டபாக்கம் - புதுச்சேரி
5-குடேரி - கர்நாடகா
6-சோப்பல் - ஹிமாச்சல பிரதேசம்
7-லகேரி - ராஜஸ்தான்
8-பெரியகுளம்- தமிழ்நாடு
9-முன்ச்யரி-உத்தரகாண்ட்
10-சுர்கோரம்-கோவா
கடந்த 2017ம் ஆண்டு வெளியிடப்பட்ட சிறந்த 10 காவல்நிலையங்கள் பட்டியலில், கோவை ஆர்.எஸ் புரம் காவல்நிலையம் முதல் இடம் பிடித்ததும், சிறந்த காவல்நிலையத்துக்கான விருதை காவல் ஆய்வாளர் ஜோதி (சட்டம் மற்றும் ஒழுங்கு) பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
source ns7.tv