ஞாயிறு, 16 டிசம்பர், 2018

மசூலிப்பட்டினம் அருகே நாளை கரையை கடக்கிறது பெய்ட்டி புயல்! December 16, 2018

Image

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. பெய்ட்டி என பெயரிடப்பட்ட இந்த புயல், ஆந்திராவை நோக்கி நகர்வதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து நேற்றிரவு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், பெய்ட்டி புயல், சென்னைக்கு தென்கிழக்கில்
590 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாகவும், அடுத்த 24 மணிநேரத்தில் தீவிரப் புயலாக வலுவடைந்து ஆந்திர மாநிலத்தின் மசூலிப்பட்டினத்திற்கும் காக்கிநாடாவிற்கும் இடையில் நாளை பிற்பகல் கரையை கடக்கும் என்றும் தெரிவித்தார். 
இதன் காரணமாக தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்களில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் எனவும், வட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழையும், ஓரிரு இடங்களில் கனமழைக்கூடும் என்றும் புவியரசன் குறிப்பிட்டார்.
வங்கக்கடலில் புயல் சின்னம் காரணமாக, கடலூர் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
source: NS7.tv