
source: ns7.tv
கோவா முதல்வர் மனோகர் பரிகார் மூக்கில் டியூபுடன் பாலம் ஒன்றை ஆய்வு செய்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவா முதல்வர் மனோகர் பரிகார் கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் குறித்த எந்த புகைப்படமும் இதுவரை வெளிவராத நிலையில், இன்று அவர் கோவாவில் கட்டிமுடிக்கப்படாத நிலையில் உள்ள பாலம் ஒன்றை ஆய்வு செய்த புகைப்படம் வெளியாகி இருக்கிறது.
அந்த புகைப்படத்தில், அவரது மூக்கில் டியூப் ஒன்று சொருகப்பட்ட நிலையில் இருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. சுவாரி நதியின் குறுக்கே கட்டப்பட்டு வரும் பாலத்தை ஆய்வு செய்ய பரிகார் 6 கி.மீ பயணம் செய்ததாகவும், அவருடன் 2 மருத்துவர்கள் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
உடல்நலக்குறைவின்போது கோவா முதல்வர் இதுபோன்று செய்தது ஆட்சியை கைப்பற்றுவதற்காக பாஜக அரசு செய்யும் யுக்தி என பல எதிர்கட்சி தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். இது ஒருபுறம் இருந்தாலும், பலர் பரிகாரின் செயலை பாராட்டி வாழ்த்து செய்தி அனுப்பி வருகின்றனர்.