source: ns7.tv
வடதமிழக கடலோர மாவட்டங்களில் இன்று மாலை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, இன்று மேலும் வலுப்பெற்று புயலாக மாறும் என்றும், இன்றிரவு தீவிர புயலாக மாறி நாளை மறுநாள் ஆந்திர மாநிலம் ஒங்கோலுக்கும் காக்கிநாடாவுக்கும் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புயல் கரையை கடக்கும் போது ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் வடதமிழக கடலோர மாவட்டத்தில் பரவலாக கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது அடுத்த 12மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று அடித்த 12 மணி நேரத்தில் புயலாக மாறி அதன் பின்னர் 24மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று தீவிர புயலாக மாறி வரும் 17தேதி நண்பகல் தீவிர புயலாகவே( severe cyclonic Strom) ஆந்திர மாநிலம் ஒங்கோலுக்கும் காக்கிநாடாவுக்கும் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.