வெள்ளி, 14 டிசம்பர், 2018

"ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் தலையிட முடியாது!" - உச்சநீதிமன்றம் December 14, 2018



Image

ரஃபேல் ஒப்பந்த விவகாரம் தொடர்பான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்ததுள்ளது உச்ச நீதிமன்றம்.
பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரூ.58 ஆயிரம் கோடி செலவில், 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில், முறைகேடு நடைபெற்றதாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்  குற்றம் சாட்டி வந்தன. இதுதொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, மற்றும் பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோர், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தனர்.
இந்த வழக்கில், கடைசியாக கடந்த மாதம் 14-ம் தேதி விசாரணை நடைபெற்றது. அப்போது, ரஃபேல் விமானங்களின் விலை விவரம், மற்றும் ஒப்பந்தம் தொடர்பான 14 பக்கங்கள் கொண்ட அறிக்கையும், சீலிடப்பட்ட கவரில் வைத்து, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது. மேலும், இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர். அவ்வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரத்த நீதிபதிகள் ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் தலையிட முடியாது எனவும், மேலும் ரஃபேல் ஒப்பந்தத்திற்கு பின்பற்றப்பட்ட வழிமுறைகளிலும் சந்தேகத்திற்கு இடமான அம்சங்கள் இல்லை எனக் கூறி ரஃபேல் ஒப்பந்த விவகாரம் தொடர்பான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
source: ns7.tv