ஞாயிறு, 16 டிசம்பர், 2018

“வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டால் மக்கள் போராளிகளாகத்தான் மாறுவார்கள்!”- நடிகர் கார்த்திக் December 16, 2018

Image

source: ns7.tv
வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டால் மக்கள் போராளிகளாகத்தான் மாறுவார்கள் என நடிகர் கார்த்திக் கருத்து தெரிவித்துள்ளார். 

மனித உரிமை காக்கும் கட்சி என்ற பெயரில் புதிய கட்சி மற்றும் கொடியை அறிமுகம் செய்து வைத்த பின்னர் நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கார்த்திக் இவ்வாறு தெரிவித்தார். வாழ்வதற்காக அனைத்து தரப்பு மக்களும் தினம், தினம் போராட வேண்டிய நிலை தற்போது உருவாகியிருப்பதாக குறிப்பிட்ட கார்த்திக், மத்தியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் பொறுப்பாக 
நடந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். 

பெரும் பணக்காரர்கள் 65 ஆயிரம் கோடி கடன் வைத்தாலும் அதனை மீட்க அவசரம் காட்டாத அரசுகள், சிறு விவசாயிகளுக்கு 65 ஆயிரம் ரூபாய் கடனை தள்ளுபடி செய்ய மனம் வராதது வேதனை அளிப்பதாகவும் நடிகர் கார்த்திக் அப்போது குறிப்பிட்டார். 

Related Posts: