வியாழன், 20 டிசம்பர், 2018

, ஒரு கனமீட்டர் ரூபாய் 1.10 பைசா என்று விலை நிர்ணயிக்கும் இந்திய அரசின் மக்கள் விரோதப் போக்கையும் பேராசிரியர் த. செயராமன் அம்பலப்படுத்தினார்.



source: SUN NEWS ,FB மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு
சென்ற ஆண்டு, 11-11-2017 அன்று சன் தொலைக்காட்சி நேர்காணலில் ஆறுகளை முதலாளிகளிடம் ஒப்படைத்து ஆற்று நீரை மக்களைக் காசு கொடுத்து வாங்க வைக்கும் இந்திய அரசின் நயவஞ்சகத் திட்டத்தையும், தங்கள் கொல்லைப்புறத்தில் குழாய் அமைத்து நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதற்குக் கூட, ஒரு கனமீட்டர் ரூபாய் 1.10 பைசா என்று விலை நிர்ணயிக்கும் இந்திய அரசின் மக்கள் விரோதப் போக்கையும் பேராசிரியர் த. செயராமன் அம்பலப்படுத்தினார். இந்த வீடியோவைக் கவனமாகப் பார்க்கவும். ஆறுகளும், நிலத்தடி நீரும், அணைகளும் பெருமுதலாளிகளிடம் ஒப்படைக்கப்பட இருக்கின்றன. நீங்கள் ஒவ்வொரு சொட்டு நீரையும் காசு கொடுத்து வாங்கப் போகிறீர்கள்!