source: ns7.tv
புதுவையில், ஆளுநர் மற்றும் முதலமைச்சர் இடையிலான அதிகார மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. பொங்கலை முன்னிட்டு இலவச ரேசன் அரிசி வழங்கும் விவகாரம் தொடர்பாக இருவரும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருவது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்களுக்கு இலவச பொருட்கள் வழங்குவதற்கான கோப்பு துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு இன்று மீண்டும் அனுப்பப்பட உள்ளதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் நாராயணசாமி, அரசு ஊழியர்களுக்கு தகுதி தேர்வு நடத்தி பள்ளி ஆசிரியைப்போல ஆளுநர் கிரண்பேடி செயல்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
முதலமைச்சர் நாராயணசாமியின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்துள்ள துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, பொங்கல் பண்டிகை முன்னிட்டு இலவச ரேஷன் பொருட்கள் வழங்க தாம் மறுப்பு தெரிவித்து வருவதாக கூறுப்படுவது உண்மை இல்லை என்று கூறியுள்ளார்.
மேலும், நிதி இல்லாமல் வெறும் அறிவிப்புகளை அறிவித்து வருவதாக குற்றம்சாட்டியுள்ள அவர், தாம் எந்த திட்டத்திற்கும் தடை விதிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
source ns7.tv