source; ns7.tv
இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பால் உருவாகிய சுனாமியால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 281-ஆக உயர்ந்துள்ளது.
இந்தோனேஷியாவின் சுன்டா என்ற பகுதியில், கடலுக்கு அடியில் இருந்த கிராக்டோ என்ற எரிமலை திடீரென வெடித்து சிதறியது. இதனால் நீருக்குள் நில அதிர்வு ஏற்பட்டு, சுனாமி உருவானது. இதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், 50-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். அவர்களைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
சுனாமி தாக்குதலில் காயமடைந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுனாமி காரணமாக கடலோரப் பகுதிகளில் இருந்து 11,450 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இந்த சூழலில், மீண்டும் சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அந்த நாட்டு பேரிடர் மேலாண்மை நிறுவனம் அறிவித்துள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.