எந்த ஒருவரின் கணினியையும் கண்காணிக்கலாம் என 10 நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதற்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சமூகநீதி இயக்கம் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், சென்னையில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இந்த விழாவின்போது, செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், சனாதன சக்திகளுக்கு தமிழக மண் ஒருபோதும் இடம் அளிக்காது என்றும் நாடாளுமன்ற தேர்தல் அதனை உணர்த்தும் என்றும் கூறினார்.
நாட்டில் உள்ள அனைத்து கணினிகளையும் கண்காணித்து தகவல்களை ஆய்வு செய்ய 10 அமைப்புகளுக்கு அனுமதி அளித்து மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்திருப்பது மிகப்பெரிய ஒடுக்குமுறை என குறிப்பிட்ட அவர், தனிநபர் சுதந்திரத்தை பறிக்கும் இந்த நடவடிக்கையை கண்டித்து, ஜனநாயக சக்திகள் வெகுண்டு எழ வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
source: ns7.tv