புதன், 19 டிசம்பர், 2018

யானைகள் வராமல் தடுக்க விவசாயிகளுக்கு நூதன ஆலோசனை வழங்கிய வனத்துறையினர்!! December 18, 2018

Image

source: ns7.tv
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள விவசாய நிலங்களுக்குள் வனவிலங்குகள் புகாமல் தடுக்க, விவசாயிகளுக்கு வனத்துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர். 
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகர் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் பயிரடப்படும் வாழை மரங்கள், மக்காசோளப்பயிர்களை வனவிலங்குகள் தொடர்ந்து சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதை தடுக்க, யானைகளுக்கு பிடிக்காத செண்டு மல்லி, புகையிலை, அவரை, மஞ்சள் உள்ளிட்ட பயிர்களை பயிரிட வனத்துறையினர் ஆலோசனை வழங்கினர். இதன் மூலம் வனவிலங்குகள் வராமல் தடுக்கமுடியும் என்பதில் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், உப தொழிலான தேனீ வளர்ப்பையும் மேற்கொள்ள அப்பகுதி விவசாயிகளுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தினர்.