செவ்வாய், 18 டிசம்பர், 2018

உலகிலேயே மிக கடினமான உழைப்பாளிகள் இந்தியர்கள் : ஆய்வு முடிவு November 19, 2018

Image

உலகிலேயே மிகக் கடினமாக உழைப்பவர்கள் இந்தியர்கள் என அண்மையில் நடந்த ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

பிரபல மனிதவள மேம்பாட்டு நிறுவனமான Kronos Incoporated , ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், இந்தியா, மெக்ஸிகோ, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த  2,772 முழு நேர மற்றும் பகுதி நேர உழைப்பாளர்களிடையே ஆய்வு மேற்கொண்டனர். 

அதில், 69 சதவீத இந்தியர்கள் 5 நாள் வேலை செய்வது சரிதான் எனவும் இது தங்களுக்கு திருப்திகரமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்தியாவிற்கு அடுத்தபடியாக மெக்ஸிகோ   (43%) , 2ம் இடத்தில் இருப்பதாகவும் அமெரிக்கா (43%), 3ம் இடத்தில் இருப்பதாகவும் ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. 

இதுமட்டுமல்லாமல், பிரிட்டன் (16 %) , பிரான்ஸ் (17 %) மற்றும் ஆஸ்திரேலியாவை (19%) சேர்ந்தவர்கள் வாரத்தில் 5 நாட்கள் வேலை பார்ப்பது குறைந்த அளவே திருப்தி அளிப்பதாகவும் வாரத்திற்கு 4 நாட்கள் பணி புரிவதே போதுமானது எனவும் தெரிவித்துள்ளனர். 

இதன்மூலம் உலகிலேயே கடினமான உழைப்பாளிகள் இந்தியர்கள் என்பதை உலக நாடுகளுக்கு பறைசாற்றி இருக்கிறது இந்த ஆய்வு. 
source: ns7.tv