வெள்ளி, 14 டிசம்பர், 2018

ரஃபேல் விவகாரத்தில் நடந்தது என்ன? December 14, 2018


source: ns7.tv

Image

➤   2007 - பல்நோக்கு பயன்பாடு கொண்ட 126 போர் விமானங்களை வாங்க காங்கிரஸ் அரசு திட்டம்.

 ➤   ஜனவரி 2012 - விமானம் தயாரிக்கும் ஏலத்தில் பிரான்ஸின் டஸ்ஸால்ட் நிறுவனம் வென்றது

➤   ஜனவரி 2012 - முதற்கட்டமாக 126 போர் விமானங்களில் பயன்பாட்டுக்கு தயாரான நிலையில் 18 விமானங்களை தரவேண்டும் என ஒப்பந்தம்

➤   ஜனவரி 2012- எஞ்சிய 108 போர் விமானங்களையும் டஸ்ஸால்ட் உதவியுடன் இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல் நிறுவனம் தயாரிக்க முடிவு

➤   மார்ச் 2014 - விமானம் தயாரிப்பதற்கான பணிகள் குறித்து டஸ்ஸால்ட் மற்றும் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல் நிறுவனங்கள் பேச்சுவார்த்தை

➤   ஒரு ரஃபேல் விமானம் சுமார் ரூ.629 கோடி என டஸ்ஸால்ட் நிறுவனத்துடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை என தகவல்


➤   மே 2014 - நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக ஆட்சிக்கு வந்தது

➤   மார்ச் 2015 - அனில் அம்பானி தலைமையில் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது

➤   ஏப்ரல் 2015 - டஸ்ஸால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரஃபேல் விமானங்களை வாங்க உள்ளதாக பிரதமர் மோடி பிரான்ஸில் அறிவிப்பு.

➤   செப்டம்பர் 2016 - 36 ரஃபேல் விமானங்களை வாங்க பிரான்ஸுடன் இந்திய அரசு ஒப்பந்தம்

➤   செப்டம்பர் 2016 - இந்தியாவுக்கு 126 போர் விமானங்கள் தேவையில்லை, 36 விமானங்களே போதுமானது - பாதுகாப்பு அமைச்சர் மனோஹர் பாரிக்கர்

➤   செப்டம்பர் 2016 - 6 விமானங்களை வாங்க 58 ஆயிரம் கோடி ரூபாய் என விலை நிர்ணயம்- ஒரு விமானம் 1670 கோடி என கணக்கிடப்பட்டது

➤   செப்டம்பர் 2016 - ஒரு ரஃபேல் விமானத்திற்கு பாஜக அரசு 3 மடங்கு விலை கொடுத்து ஒப்பந்தம் என காங்கிரஸ் குற்றச்சாட்டு

➤   அக்டோபர் 2016 - விமானங்களை தயாரிக்க அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனத்துடன் டஸ்ஸால்ட் நிறுவனம் ஒப்பந்தம்

➤   அக்டோபர் 2016 - பொதுத்துறை நிறுவனமான HAL-ஐ கணக்கில் கொள்ளாமல் ரிலையன்ஸ் டிஃபென்ஸிற்கு பாஜக அரசு உதவி என காங்கிரஸ் புகார்


➤    டிசம்பர் 2017- விமானங்களை சேர்ந்து தயாரிக்க டஸ்ஸால்ட்டிடம் இருந்து அழைப்பு வந்தது; மத்திய அரசுக்கு சம்பந்தமில்லை - ரிலையன்ஸ்

➤   செப்டம்பர் 2018 - ரிலையன்ஸ் நிறுவனத்தை பரிந்துரை செய்தது இந்திய அரசு தான் என பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹோலண்டே பேட்டி

➤   செப்டம்பர் 2018 - ரிலையன்ஸ் - டஸ்ஸால்ட் இடையேயான ஒப்பந்தத்தில் இந்தியா - பிரான்ஸ் அரசுகள் தலையிடவில்லை - மத்திய பாதுகாப்புத்துறை
 
➤   செப்டம்பர் 2018 - ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்ந்தெடுத்தது தங்கள் முடிவு என டஸ்ஸால்ட் நிறுவனம் அறிக்கை

➤   ரஃபேல் விவகாரத்தில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர் குற்றச்சாட்டு

➤   ரஃபேல் விவகாரத்தில் எந்தவித ஊழலும் நடைபெறவில்லை - அருண் ஜெட்லி, நிர்மலா சீதாராமன் பதில்

➤   ரஃபேல் விவகாரத்தை விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அவற்றின் மீதான விசாரணை முடிவடைந்த நிலையில் கடந்த நவம்பர் 14ம் தேதி தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் வழக்கை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது