புதன், 19 டிசம்பர், 2018

மண்ணின் மைந்தர்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை: ம.பி.முதல்வர் December 19, 2018

Image

மத்திய பிரதேசத்தில் உள்ள நிறுவனங்களில் பெரும்பாலும்வெளிமாநிலத்தவர்களுக்கே வேலைவாய்ப்பு அளிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் கமல்நாத் குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய பிரதேச தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க பகுஜன் சமாஜ் கட்சி, மற்றும் சமாஜ்வாதி கட்சி ஆதரவளித்தது. இந்நிலையில், முதலமைச்சர் கமல்நாத் தெரிவித்துள்ள கருத்து கூட்டணி கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ள பல தொழிற்சாலைகள், தொழிலாளர்களை உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் போன்ற வெளி மாநிலங்களில் இருந்து அழைத்து வருவதாகவும், தாம் அதை விமர்சனம் செய்ய விரும்பவில்லை என்றாலும் அம்மாநிலத்தில் உள்ள இளைஞர்கள் விரக்தியில் உள்ளதாக தெரிவித்துள்ளார். ஆகையால் மாநில மக்களுக்கு வேலை வாய்ப்பளித்தால், நிறுவனங்களுக்கு சலுகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
source: ns7.tv

Related Posts: