வங்க கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, டிசம்பர் 15-16 ஆகிய தேதிகளில் தமிழக கடலோர பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், தெற்கு வங்கக் கடலில் நகர்ந்துள்ள வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என தெரிவித்தார்.
ஒருசில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், எனவே, டிசம்பர் 15-16 ஆகிய தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பாலச்சந்திரன் கூறினார்.